தெய்வங்கள்

அருள்மிகு இருளப்பர்

முத்திருளப்பன் எனும் இருளப்பன் மகாமண்டபத்தின் தென்புரம் வீரபத்திர சுவாமிக்கு இடதுபுரம், இடையில் குறுவாளுடனும் வலதுகையில் சிறிய கதாயுதத்தை ஓங்கிய நிலையிலும் முறுக்கிய மீசையுடனும் வீரம்கொண்ட பார்வையுடனும் மார்பில் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டும் நிமிர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார். இவர் பக்தர்களின் பய உணர்வு மற்றும் மனகுழப்பங்களை நீக்கி அருள்பாலிக்கிறார்.