



சித்தர் கோயில் என்று பெருமையாக அழைக்கப்படும் புலியூரான் அருள்மிகு சித்தநாத குருநாதசாமி கோயில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு கிழக்கில் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புலியூரான் கிராமத்தில் உள்ளது. இந்த இந்துக் கோயிலின் முதன்மைத் தெய்வமாக சித்தநாதர் வணங்கப்படுகிறார். இக்கோயில் 16 ம் நூற்றாண்டில் புகழ்பெற்ற சித்தரின் ஜீவசமாதி மேல் எழுப்பப்பெற்று, இடைப்பட்ட காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்கோயிலின் தீர்த்தம் அருமருந்தாக கருதப்பட்டு, பக்தர்கள் சித்தநாதரின் அருளால் தங்களுடைய தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும்,விசக் கடிகளுக்கும் தீர்த்தம் பெற்று சுகம் அடைகின்றனர்.
தெய்வங்கள்


அருள்மிகு நந்தி
நந்தியம் பெருமான் தனிமண்டபம் பெற்று சித்தநாதரை நோக்கி அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றார். மாதம் தோறும்வரும் திரயோதசி நாளன்று பிரதோச வேளையிலும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்றும் அபிசேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூசை நடைபெறும்.

அருள்மிகு விநாயகர்
அத்திமுகன்,ஐங்கரன்,கணபதி என்று அழைக்கப்படும் “விநாயகர்” இத்தலத்தில் கன்னி மூலையில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றார். அவருக்கு எதிரில் அவரது வாகனம் மூஞ்சூறு விநாயகரை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது.

அருள்மிகு தம்பிரான்
சித்தரின் அருள் ஆசி பெற்ற மூதாதை “தம்பிரான்” கருவறையின் இரண்டாம் பிரகாரத்தில் சித்தநாதனுக்கு வலதுபுரம் பீட வடிவாக காட்சி அளிக்கின்றார். இவரே இக்கோவிலை அமைத்து “சித்தர் கோவில்” என உலகம் எங்கும் பெயர்விளங்க செய்தவராவார்.

அருள்மிகு மகமாயி
உலகில் பருவ காலமாற்றத்தினால் ஏற்படும் நோய் மற்றும் தீவினைகளில் இருந்து மக்களை காப்பாற்றும் “மகமாயி அம்மன்” சித்தநாதனுக்கு வலதுபுரம் நின்ற கோலத்தில் கருவறையில் காட்சி அளிக்கின்றாள்.
துதிப்பாடல்
துதிப்பாடல்
புகைப்படத் தொகுப்பு
