தெய்வங்கள்

கொடிமரம்

கோயிலில் தெய்வங்களுக்கான ஆற்றல் நிலைத்துநிற்க பல்வேறுவகையான அபிசேகங்களும் ஆராதனைகளும் செய்யபடுகின்றன. எனினும் கோயிலில் உள்ள கொடிமரம் வின்னில் பெருகி உள்ள தெய்வீக ஆற்றலை கவர்ந்து மூலவரின் ஆற்றல் மென்மேலும் அதிகரிக்க செய்ய பெரிதும் பயன்படுகிறது. கொடிமரம் மனிதனின் முதுகுத்தண்டின் தத்துவத்தை விளக்கும் வண்ணம் முப்பத்திரண்டு கணுக்களாக இருக்கும். கொடிமரம் நல்ல வைரம் பாய்ந்த சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் ஆகிய மரங்களை கொண்டு செய்வது சிறப்பானதாகும். கொடிமரத்தில் பீடமாக சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ள அடிப்பாகம் இறைவனின் படைத்தல் தொழிலையும், தாமரைபோன்றுள்ள பகுதி இறைவனின் காத்தல் தொழிலையும், தண்டுபகுதி சிவனின் வடிவமாகவும் கருதப்படுகிறது. இக்கோயிலில் பெருமை வாய்ந்த கொடிமரம் மகாமண்டபத்தில் நந்தி மற்றும் பலிபீடத்திற்கு மத்தியில் அமையப்பெற்றுள்ளது மிகவும் சிறப்பானதாகும்.