தெய்வங்கள்
அருள்மிகு பேச்சி அம்மன்
வாக்கு, நீதி, நேர்மை போன்றவைக்கு அடையாளமாக விளங்குபவள் பேச்சி அம்மன் ஆவாள். இவற்றை மீறுபவர்கள் மீது கடும் கோபம் கொண்டவள். பக்தர்களின் பேச்சுத்திறன் மற்றும் திக்குவாய் பேச்சு போன்ற குறைகளை நீக்குபவளும் இவளே. தன் வலதுபுரம் ஒரு பெண்ணும் இடதுபுரம் ஓர் ஆணும் தன்கைகூப்பி வணங்கி நிற்க வலது கையில் கூரியவாளுடன் ஓங்கிய வண்ணம் இக்கோயிலில் கம்பீரமாக நின்ற கோலத்தில் காட்சி அளித்து பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள்புரிகின்றாள்.