தெய்வங்கள்
அருள்மிகு வீரபத்திரர்
சிவபெருமானின் 64 அம்சங்களில் ஒருவரானவரும், தட்சனின் யாககுண்டத்தை அழிக்கும் பொழுது வெப்பம் தாளாமல் சிவனது உடலில் ஏற்பட்ட வியர்வையில் தோன்றிய அக்னி வியர்வை சித்திரர் எனும் வீரபத்திரர் இத்தலத்தில் மகாமண்டபத்தின் தென்புரம் நின்றகோலத்தில் காட்சி அளிக்கின்றார். இவர் தன் பத்து கைகளிலும் வில், அம்பு, மான், மழு, உடுக்கை, மணி, கத்தி, சூலம், வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களை ஏந்திய நிலையில் தன் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கின்றார். இவருக்கு வெற்றிலையால் மாலை அணிவித்து வழிபட்டால் பக்தர்கள் வேண்டும் வரங்களை உடனே வழங்கி மகிழ்விக்கின்றார்.