தெய்வங்கள்
கட்டபுளியமரம்
16ம் நூற்றாண்டில் தென்பொதிகையில் இருந்து வந்த சித்தர் இப்புளியமரத்திற்கு கீழ்தங்கிஇருந்து இருபத்தோரு தேவதைகளை வரவழைத்து “தளிகை ”(அமுது) படைத்து வணங்கிவந்தார். அவருக்கு பின் அவரது சீடர் தம்பிரான் ஊருக்குள், இருபத்தோரு தேவதைளுடன் சித்தருக்கு ஆலயம் எழுப்பி “ சித்தர் ஆலயம்” என பெயர்வைத்து சிறப்புடன் இறைப்பணி செய்து வந்தார். எனவே இக் கட்டபுளியமரம் கோயிலின் “தலவிருட்சம்” என வழங்கபட்டு இக்காலத்திலும் சித்தரின் தவ வலிமையை பறைசாற்றும் வண்ணம் பசுமையுடன் ஓங்கி வளர்ந்த கிளைகளுடன் காட்சி அளிக்கின்றது. மஹாசிவராத்திரி மறுநாள் வரும் அமாவாசை நாள் அன்றும் ஆடிமாத அமாவாசை நாள் அன்றும் ,இத்தலத்தில் தீர்த்தகுடத்தில் தீர்த்தநீரை நிரப்பி பூசைகள் செய்து சித்தரை பக்தர்கள் வழிபடுவர். பின் தீர்த்தநீரை கோயிலில் உள்ள மூலவருக்கும், உற்சவருக்கும் அபிசேகம் செய்து சிறப்பு பூசைகள் செய்யப்படும்.