திருவிழாக்கள்

image

கும்பாபிஷேகம்

சிறப்பு வாய்ந்த மகா கும்பாபிஷேகம் இக்கோயிலில் ஸ்ரீ விக்ருதி வருடம் மாசி மாதம் 4 ஆம் நாள் (16.02.2011) புதன் கிழமை அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இத் திருக்கோயிலில் 16.02.2011 அன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா சோபகிருது ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் நாள் 01.06.2023 வியாழக்கிழமை இக்கோயிலின் பரம்பரை பூசாரிகள் ( மூதாதையரான தம்பிரானின் வழி வந்த பூசாரிகள்), குடிவழி மரபினர்கள் மற்றும் புலியூரான் கிராமத்தார்கள் ஒத்துழைப்புடனும் “ புலியூரான் அருள்மிகு சித்தநாத குருநாத சுவாமி கோயில் பரம்பரை பூசாரிகள் சங்கம் “ மேற்கொண்ட முயற்சியுடனும் சீரும் சிறப்புடன் நடைபெற்றது.

இக் கும்பாபிஷேகம் பெருவிழாவிற்காக கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றது. புதிதாக சாலா கோபுரம் கட்டப்பட்டது மற்றும் கொடிமரத்திற்கு புதிய செப்புக் கவசம் பொருத்தப்பட்டது.