தெய்வங்கள்
அருள்மிகு சிதம்பரத்தாண்டவர்
சிதம்பரத்தாண்டவர் தன் நான்கு கைகளில் பின்இடது கையில் நான்கு வேதங்களை குறிக்கும் வண்ணம் “மானை”யும், பின்வலது கையில் முனிவர்கள் அனுப்பிய புலியை வதம் செய்ய பயன்படுத்திய கருவியை “மழு” வாகவும், முன் இடது கை என் திருவடியை பற்றினால் முக்தி அடையலாம் என்பதை குறிக்கும் வண்ணம் “வரத” முத்திரையுடனும், முன் வலது கை பக்தர்களுக்கு “யாமிருக்க பயம் ஏன்” என்பதை குறிக்கும் வண்ணம் “அபய” முத்திரையுடனும் “உற்சவ மூர்த்தியாக” இரண்டாம் பிரகாரத்தில் சித்தநாதருக்கு இடதுபுரம் ஐம்பொன்னினால் வடிவமைக்கப்பட்டு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார்.
(உற்சவம் என்றால் “திருவிழா”. கோயில் திருவிழா காலங்களில் ஊருக்குள் சென்று மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டி ஊருக்குள் செல்பவரே உற்சவமூர்த்தி)