திருவிழாக்கள்

image

திருக்கார்த்திகை தீபவிழா

கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று கோயில் தீப விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டு மிக எழிலாக காட்சி அளிக்கும். சிதம்பரத்தாண்டவர் காளை வாகனத்தில் எழுந்தருளி, ஊர் முழுவதும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார்.கோயிலின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்படும். தீயசக்திகள் யாவும் அழிந்து, பக்தர்கள் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ நிகழ்த்தப்படுவதாகும்.