நிர்வாகம்
16ம் நூற்றாண்டில், இக்கோயில் ”சித்தர் ஆலயம்” என பிரதிஷ்டை செய்யப்பட்டு எங்கள் முன்னோர்களின் குடும்பத்தினர் இக்கோயிலை நிர்வகித்து வந்தனர். பங்காளி குடும்பத்தினர் சுழற்சி முறையில் வருடத்திற்கு ஒருகுடும்பத்தினர் கோயிலின் நித்திய பூசைகள் செய்தும், திருவிழாக்கள் நடத்தியும், கோயிலை புனரமைப்பு செய்தும், கோயிலின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பாதுகாத்தும் வந்தனர்.
ஆவணங்களில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், 1863ம் வருடம் முதல் கோயிலை நிர்வகிக்கும் சுழற்சி முறை நெறிமுறைபடுத்தபட்டு, கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டு அங்கீகரிக்க பட்டு, ஆவணபடுத்தபட்டு வருகின்றது.
இம்முறையானது, பூசாரிகள் ஒரு குடும்பத்தினரின் நிர்வாக காலம் சித்திரை 2ஆம் தேதி ஆரம்பித்து வரும் வருடம் சித்திரை மாதம் 1ஆம் தேதிவரை ஓர் ஆண்டு கோயில் நிர்வாகத்தை பொறுப்பேற்று, தினசரி பூசைகள் செய்து, விழாக்களையும் நடத்தி வருவதோடு கோயிலையும் அதன் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் கண்கானித்துப் பராமரித்து வரும் மேலாண்மை கொண்ட பரம்பரை பூசாரிகள் ஆவர்.
“புலியூரான் அருள்மிகு சித்தநாத குருநாத சுவாமி கோயில் பரம்பரை பூசாரிகள் சங்கம்” என்ற பதிவுசெய்யபட்ட அமைப்பு பங்காளிகள் அனைவரும் உறுப்பினர்களாக உருவாக்கப்பட்டு, கோயிலின் விவகாரங்களை கவனித்துகொண்டும், புனரமைப்பு பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.