நேர்த்திக்கடன்
ஒரு செயல் நடைபெறுவதற்கு தேவையான மற்றொரு செயலை கோயிலில் செய்து நன்மை அடைவது நேர்த்திக்கடன் செலுத்துதல் என்பதாகும் . இக்கோயிலில் பரிகாரமாக உப்பும் கருமிளகும் செலுத்தப்படுகிறது. உப்பு தோல் நோய்களான பருக்கள் அரும்பாரை கருந்தேமல் போன்ற நோய்களை போக்கவல்லது, கருமிளகு சிறிய விஷகடிகளை போக்கவல்லது. இக்கோயிலில் பக்தர்கள் தங்களது தோல்நோய் மற்றும் விஷகடிகளை நீக்கி தரும் படி உப்பு மற்றும் கருமிளகை இறைவனை வேண்டி பரிகாரமாக செலுத்துகின்றனர். சித்தநாதரின் அருளால் பக்தர்கள் நோய்கள் நீங்கி நல்ல குணம் அடைகின்றனர்.