தெய்வங்கள்
பீடங்களாக காட்சியளிக்கும் தெய்வங்கள்
பாதாளி அம்மன் இக்கோயில் கருவறைக்கு தென்புரம் பீடவடிவாக காட்சியளிக்கின்றாள்.
வேட்டை கருப்பன் என அழைக்கப்படும் முத்துக்கருப்பன் விநாயகருக்கு இடதுபுரம் பீட வடிவமாக காட்சியளிக்கிறார்.
ஒண்டிவீரன் என அழைக்கப்படும் ஒண்டிவீரபத்திரர் நல்லதம்பி சுவாமிக்கு இடதுபுரம் பீட வடிவமாக காட்சியளிக்கிறார்.
பைரவர் சாமி மகாமண்டபத்தின் ஈசானிய மூலையில் பீடவடிவமாக காட்சியளிக்கிறார்.
ஆலடி சுவாமி மகாமண்டபத்திற்கு தெற்கே வீரபத்திர சுவாமி சன்னதிக்கு வலதுபுறம் பீட வடிவமாக காட்சியளிக்கிறார்.
உரல் கடையப்பர் கருப்பணன் சுவாமி சன்னதிக்கு எதிரே பீடவடிவமாக காட்சியளிக்கிறார்.